பாகிஸ்தானில் நீளமாக காதுடன் பிறந்த ஆட்டுக்குடி!

0
620

பாகிஸ்தானில் பிறந்துள்ள ஆட்டுக்குடி ஒன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் அந்த ஆட்டுக்குட்டியை அக்கம்பக்கத்தினர் வந்து ஆர்வமாக பார்த்துச் செல்கின்றனராம்.

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தைச் சேர்ந்த முகமது ஹசன் நரிஜோ என்பவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது ஆட்டுப்பண்ணையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது.

இவ்வளவு நீளமா! பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆட்டுக்குட்டி

அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருந்ததைக் கண்டு உரிமையாளர் மிகவும் ஆச்சரியமடைந்தார். அந்த ஆட்டுக்குட்டிக்கு சம்பா எனப் பெயரிட்ட முகமது ஆட்டுக்குட்டியின் காது எவ்வளவு நீளமாக உள்ளது என அளவெடுத்துள்ளார்.

அதில் ஒவ்வொரு காதும் 19 அங்குலம் நீளமாக அதாவது சுமார் 50 செ.மீ. நீளமாகும். பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 செ.மீ. நீளமான காது இருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.