கொழும்பில் பாரவூர்தியை நிறுத்தி எரிபொருள் வாங்கிய பெண்!

0
186

கொழும்பில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கையில் நடுரோட்டில் எரிபொருள் பாரவூர்தியை நிறுத்தி பெண் ஒருவர் தனது காருக்கு எரிபொருள் வாங்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

பௌசர் போக்குவரத்து குழுவினர் தவறான மற்றும் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது வேதனையை வெளிப்படுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஐ.ஓ.சி அறிவித்துள்ளது.

ஐ.ஓ.சி எரிபொருள் பௌசரில் இருந்து காரொன்றுக்கு பெற்றோல் கேன்களை வழங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையிலேயே இந்த அறிவிப்பை ஐஓசி வெளியிட்டுள்ளது.