சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர்!

0
147

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) டெலவெயர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லம் அருகே “சைக்கிளிங்” சென்றார்.

தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன்(Joe Biden) சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது நிலை தடுமாறி ஜோ பைடன்(Joe Biden) கீழே விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் உடனடியாக எழுந்த ஜோ பைடன்(Joe Biden) தான் நலமாக இருப்பதாக கூறினார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ஜோ பைடனுக்கு(Joe Biden) காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் எந்த வித மருத்துவ கவனிப்பும் தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.