Internet Explorerக்கு சமாதி கட்டிய தென் கொரிய மென்பொருள் பொறியியலாளர்

0
526

உலகின் முதனிலை இணைய உலவி அல்லது ப்ரவுசர்களில் ஒன்றான இன்டர்நெட் எக்ஸ்ப்லோருக்கு தென் கொரியாவைச் சேர்ந்த பொன்பொருள் பொறியியலாளர் ஒருவர் சமாதி கட்டியுள்ளார்.

ஜுங் கீ யொங் என்ற பொறியியலாளரே இவ்வாறு இன்டர்நெட் ப்ரவுசருக்கு சமாதி கட்டியுள்ளார். கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்த ப்ரவுசர் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்த ப்ரவுசர் தனது சேவையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. இந்த நிலையில் குறித்த ப்ரவுசர் சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதனை குறிக்கும் வகையில் 430000 தென்கொரிய வொன்களை செலவிட்டு ஓர் சமாதியை உருவாக்கியுள்ளார்.

ஏனைய ப்ரவுசர்களை தரவிறக்கம் செய்து கொள்வதற்கு பயன்பட்ட சிறந்த ப்ரவுசர் என்ற வாசகம் சமாதியில் பொறிக்கப்பட்டுள்ளது.

தனது தொழில் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்திப்பதற்கு இந்த ப்ரவுசரை பயன்படுத்தியுள்ளதாக யொங் தெரிவித்துள்ளார்.

1995ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் உலவி ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக முதனிலை உலவியாக வலம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.