கொழும்பில் எரிபொருள் வரிசையில் நிற்பவர்களுக்கு சிற்றுண்டி வழங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

0
370

சமூக உணவு பகிர்வு அணியினருடன் இணைந்து எரிபொருள் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு நேற்று (18-06-2022) மாலை பனிஸ் மற்றும் தேனீர் வழங்கியதாக ரொஷான் மஹாநாம தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

இவர்களுக்கு நலன் விரும்பிகள் அவ்வப்போது உணவு மற்றும் பானங்களை வழங்கி வருவதை காணக் கூடியதாக உள்ளது.