உக்ரைனில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிட்ட ஐ.நா

0
149

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனில் இதுவரையில் 10,046 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 4,481 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5,565 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் கிழக்கு டான்பாஸ் பகுதியில் அதிக உயிரிழப்புகளை கண்டுள்ளது, அங்கு 2,611 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3,103 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் தற்போது மிகக் கடுமையான சண்டை நடைபெறும் இடம் டான்பாஸ் ஆகும். இங்கு உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.