பிரான்சில் ஆற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் உடல்!

0
577

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள நதி ஒன்றில் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் அழகிய இளம்பெண் ஒருவர்.

அழகுக்கலை நிபுணரான சாதனா பட்டேல் (31), தன் கணவரான சைலேஷ் பட்டேலுடன் 2018ஆம் ஆண்டு பிரான்ஸ் வந்தடைந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாக சைலேஷ் அடிக்கடி சாதனாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆகவே இருவரும் தனித்தனியாக வாழத்துவங்கியுள்ளார்கள்.

அப்படியிருக்கும் நிலையில் ஏப்ரல் 4ஆம் திகதி மக்கள் பாரீஸிலுள்ள நதி ஒன்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டு பொலிசாருக்குத் தகவலளிக்க அழுகிய நிலையில் கிடந்த அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குட்படுத்திய பொலிசார் DNA ஆதாரங்களின் அடிப்படையில் அது சாதனாவின் உடல் என கண்டுபிடித்துள்ளார்கள்.

சாதனாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட உடனே அவரது கணவரான சைலேஷை பொலிசார் தேடிச் செல்ல அவர் அதற்குள் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்கு ஓடித் தப்பியிருக்கிறார்.

சர்வதேச வாரண்ட் ஒன்றைப் பிறப்பித்து இண்டர்போல் உதவியுடன் சைலேஷைக் கைது செய்யும் முயற்சியில் பிரெஞ்சு பொலிசார் இறங்கியுள்ளார்கள்.

இதற்கிடையில் சாதனாவின் உடல் கடுமையாக அழுகிப்போயிருந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றால் ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் அவர் கொலை செய்யப்பட்டார் என்றால் யார் அவரைக் கொலை செய்தது? சைலேஷ் ஏன் தப்பி ஓடினார்? அவருக்கும் சாதனாவின் மரணத்துக்கும் என்ன தொடர்பு? என பல விடை தெரியாத கேள்விகளுடன் பொலிசார் காத்திருக்க தங்கள் மகளுக்கு என்ன ஆயிற்று என்பது தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது இந்தியாவின் மும்பையிலிருக்கும் சாதனா குடும்பம்.

சாதனாவின் கணவர் சைலேஷ் சிக்கினால் மட்டுமே இந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் என்பதால் அவரது கைதுக்காக காத்திருக்கிறார்கள் அனைவருமே!