யாழில் 500 ரூபாய் பெற்றோலுக்கு காத்திருந்த மக்கள்!

0
204

யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக நேற்று (17-06-2022) காலை முதல் மக்கள்  நீண்ட வரிசை காணப்பட்டது.

இந்த நிலையில் அங்கு நின்ற அரச உத்தியோகத்தர்கள் முன்னுரிமை அடிப்படையில் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கிருந்தவர்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தலையிட்டு அனைவருக்கும் 500 ரூபாவுக்கு பெற்றோலை வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் வரிசையில் நின்றவர்களுக்கு இரண்டு மணித்தியாலங்களின் பிற்பாடு 500 ரூபாவிற்கு பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.