75 நாட்களுக்கு மின்சாரம் இல்லை!

0
347

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்றிரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மின்பிறப்பாக்கியில் சுமார் 75 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிள்ந்துள்ளதால் தேசிய மின்வாரியத்தின் திறன் 45 சதவீதத்தில் இருந்து சுமார் 30 சதவீதமாக குறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நீர் மின்சாரம் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக மின்சாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.