20ஆம் திகதி இலங்கை வருகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு

0
134

எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த குழு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

நாட்டுக்கு வரும் குறித்த குழுவினர் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.