போதைப்பொருள் வைத்திருந்த ரஷ்ய மாடல் அழகி கைது!

0
137

ரஷ்யா அழகி ஒருவர் போதைப்பொருள் வந்த்திருந்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மாடல் ஏஜென்சி உரிமையாளரான 34 வயதான கிறிஸ்டினா துகினா. இவர் 2019 இல் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தை வென்றுள்ளார். 2020 இல் ரஷ்யா அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றார்.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தியதாக துகினா ரஷ்யா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் அரை கிலோ மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. 

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் மீது தற்போது சட்டவிரோதமாக போதைப்பொருளை கடத்துதல் விற்பனை செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.