பிரதமர் செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனமானது! சமீர

0
167

இலங்கையில் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை பார்க்கும் போது “சே குவேரா” (Che Guevara) தான் நினைவிற்கு வருகிறார் என ஐக்கிய பிரஜைகள் முன்னணியின் அழைப்பாளர் சமீர பெரேரா (Sameera Perera) தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டம் அதிகரித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களை பார்க்கும் பட்சத்தில் நமக்கு நினைவு வருவது “சே குவேரா” தான். காரணம் அவர் இராணுவத்திற்கு எதிராக போராடியவர். அதன்படி, அவர் இன மத பேதமின்றி போராடி 39 வயதிலேயே மரணித்த மனிதர்.

இருப்பினும், நமது நாட்டிலுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, (Ranil WIckremesinghe) செய்கின்ற வேலைகள் அனைத்தும் பைத்தியகார தனமாக காணப்படுகிறது.

நேற்று, இந்த மாத முடிவில் எரிபொருள் இல்லை என கடும் வெயிலிலும், பசியிலும் வரிசையில் நிற்கும் மக்களிடம் கூறுகிறார்.

நாட்டின் பிரதமர் மக்களிற்கு கூறும் பதிலா இது? அத்துடன் இரு வேளை சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, அரிசி தட்டுப்பாடு ஏற்படும், எரிபொருள் பற்றாக்குறைக்கு வாய்ப்புள்ளது என்று வரிசையில் குறைபாடுகளை அடுக்கிச் செல்கிறார். அதே போல மக்கள் அரிசியின்றி நெல் தொகையை சேகரிக்கின்றர். இவ்வாறு மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதனை கவனிக்க வேண்டிய அரசியல்வாதிகளும் அமைதியாக விலகி விலகி செல்கின்றனர்.

தற்போது மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) சென்று, ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்த பிறகும் அவர் கூறுவது, எதிர்வரும் காலங்களில் பொருட்கள் இல்லை என்று தான். நாட்டில் மருந்துகள் இல்லை, சிறு பிள்ளைகளிற்கு அவசியமான மருத்துவ வசதிகள் இல்லை. பாவம் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினரும் இணைந்து நாட்டை பாதாள சாக்கடையில் தள்ளிவிட்டனர்.

தற்போது, இந்தியாவில் மோடியின் பெயரையும் கெடுத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் இலங்கையை போல இந்தியாவின் பெயரையும் கெடுத்து விட்டார்கள் என்றே கூற வேண்டும்  என சமீர பெரேரா கூறியுள்ளார்.