தாமரை கோபுர நிர்வாகம் எடுத்த முடிவு!

0
174

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்டுதான் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் (Lotus Tower).

இந்த கோபுரம் சுமார் 365 மீட்டர் உயரம் கொண்டதாகும். தற்போது இந்த கோபுரத்தை குத்தகைக்கு வழங்க தாமரை கோபுரம் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் குறித்த கோபுரத்தை பராமரிப்பு செய்ய முடியாத நிலை காணப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.