உக்ரைனில் இரு அமெரிக்கர்களைக் சிறைபிடித்த ரஷ்யப் படைகள்

0
56

உக்ரைன் தலைநபர் கார்கிவ் வடக்கில் ரஷ்ய படைகளுடன் சண்டையிடும் இரண்டு அமெரிக்கர்கள் சுமார் ஒரு வாரமாக காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அவர்களின் குடும்பங்கள் மற்றும் ஒரு சக போராளியின் கூற்றுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலபாமாவின் டஸ்கலூசாவைச் சேர்ந்த 39 வயதான அலெக்சாண்டர் ஜோன் ராபர்ட் ட்ரூக்(Alexander John Robert Drook) மற்றும் அலபாமாவின் ஹார்ட்செல்லேவைச் சேர்ந்த 27 வயதான ஆண்டி தை என்கோக் ஹுய்ன்(Andy Thai Enkok Huin) ஆகிய இருவரே காணாமல் போயுள்ளனர்.

குழுவின் சார்ஜென்டாக செயல்படும் ஒருவர், பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடாத ஒருவர், இருவரின் கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் மற்றும் உக்ரைனுக்குள் அவர்களது நுழைவு முத்திரைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜூன் 9 அன்று இஸ்பிட்ஸ்கே நகருக்கு அருகில் உக்ரைனின் 92 வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவின் கட்டளையின் கீழ் தங்கள் பிரிவு சண்டையிட்டு வந்ததாக அந்த நபர் கூறினார்.

தேடுதல் பணி

போரின் போது ட்ரூக் மற்றும் ஹுய்ன் காணாமல் போனதாகவும், அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளில் சடலங்கள் இல்லது அவர்களின் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

அடுத்த நாள் ரஷ்ய சார்பு சமூக ஊடகத்தில் ஒரு இடுகை கார்கிவ் அருகே இரண்டு அமெரிக்கர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடந்து சந்தேகம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.