12 அரசு நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் விரைவில்!

0
543

நஷ்டத்தில் உள்ள 12 அரச நிறுவனங்களுக்கு விரைவில் புதிய தலைவர்களை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த நிறுவனங்களுக்காக நாடளாவிய ரீதியில் பிரபல வர்த்தகர்கள் பலரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய நிர்வாகிகளை நியமிக்கும் போது, ​​தங்கள் தொழில்களை மிக உயர்ந்த செயல்திறனுக்கு கொண்டு வந்த நிர்வாகிகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தற்போதைய பொருளாதார நிலைமைக்கு முகங்கொடுத்து நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனங்களை லாபகரமாக மாற்ற வேண்டியிருப்பதால் நல்ல தலைவர்கள் நியமிப்பது அவசியம் என அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.

நஷ்டமடைந்த நிறுவனங்கள், ஏற்பட்ட நஷ்டத்தின் அளவு மற்றும் நஷ்டத்திற்கான காரணங்கள் பற்றிய முழுமையான அறிக்கையை அரசாங்கம் சமீபத்தில் பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், சில தலைவர்களின் திறமையின்மையால் சில நிறுவனங்களின் செயல்பாடுகள் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.