தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

0
602

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத வாக்காளர்கள் இன்று முதல் தமது பெயர்களை பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஜூலை 12ஆம் திகதி வரை அதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் இன்று முதல் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களையும் அங்கு காண முடியுமெனத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் உள்ளடக்கப்பட்டு, அவரது பெயர் குறித்த வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனில், அது தொடர்பில் கிராம உத்தியோகத்தருக்கு அறியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், elections.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான வாக்காளராக ஒருவர் பதிவு செய்யப்பட்டுள்ளாரா என்பதையும் இணையத்தளத்தின் மூலம் சரிபார்க்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.