சுற்றுலா பயணிகளை குறிவைத்து பிரதமர் ரணில் புதிய திட்டம்!

0
495

இலங்கையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாப் பயணிகளின் ஊடாக 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த காலப்பகுதிக்குள் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறையினருடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (14-06-2022) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்களை இலக்கு வைத்து பிரதமர் ரணில் போட்ட புதிய திட்டம்!

மேலும், குறித்த இலக்கை எட்டுவதற்காக உயர்ந்த செலவினத்தைக் கொண்ட 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்ட காலத் திட்டமொன்றை உருவாக்குமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்காக 8 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர எதிர்பார்ப்பதாகவும், அவர்களின் ஊடாக 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.