பலாலி விமான நிலையத்தை மீள திறக்குமாறு பிரதமர் கோரிக்கை

0
507

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்மூலம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு ஈர்ப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருமானம்

அந்தவகையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான திட்டத்தை வகுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலம் 2025 ல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்றும் இதனால் 3.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டக்கூடிய நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

எனவே அதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறும் சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதேவேலை இந்த ஆண்டில் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.