கொழும்பில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

0
126

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் எரிபொருளை உரிய நடைமுறையில் வழங்குமாறு கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பு – பஞ்சிகாவத்தை பிரதான வீதியை மறித்து தற்போது பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றும் இன்று எரிபொருள் இல்லை என கூறியமையால் கோபமடைந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கான எரிப்பொருளை வழங்காதவரை அங்கிருந்து செல்ல போவதில்லை என மக்கள் கூறியுள்ளதுடன் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.