16 வயது மாணவன் நீரில் மூழ்கி மாயம்

0
173

குடும்பத்துடன் நீராடச் சென்ற 16 வயது மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் இவர்கள் நீராட சென்ற போது நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய ஹஷான் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல் போன மாணவனை பொலிசார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் தேடி வருவதுடன் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கதறி அழும் தாயார்

இந்நிலையில் “என் குழந்தை…. புண்ணியம் கிடைக்கும் எனது குழந்தையை என்னிடம் கொண்டு வந்து தாருங்கள்… இதில் இறங்குவதற்கு யாரும் இல்லையா? உன்னை என்னால் காப்பாற்ற முடியவில்லை… நீ செல்வதை பார்த்துக் கொண்டு என்னால் எப்படி உயிர் வாழ முடியும் மகனே என ஹஷானின் தாய் கண்ணீர் மல்க இவ்வாறு கூறினார்.

இதேவேளை, சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துகண்டிய பிரதேசத்தில் உள்ள DC 03 கால்வாயில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று மாலைஉயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ பொத்துவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.