இந்தியாவில் பீட்சா டெலிவரி யுவதியை தாக்கிய பெண்கள்

0
164

இந்தியாவில் உணவை டெலிவரி செய்யும் ஊழியர்களை சில வாடிக்கையாளர்கள் மரியாதை இல்லாமல் நடத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகிறது.

அந்த வகையில் மத்திய பிரதேசம் இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் ஒரு பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து சரமாரியாகத் தாக்கிய காணொளி வெளியாகியுள்ளது.

அப்பெண்கள் குறித்த டெலிவரி செய்யும் யுவதி தம்மை முறைத்ததாக கூறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. அந்த யுவதி மீது அருகிலிருந்த கம்பை எடுத்து அந்த பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த நான்கு பெண்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

குறித்த பெண்கள் சிக்கிய பின்னரே டெலிவரி செய்யும் பெண் ஏன் தாக்கப்பட்டார் என்ற விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகின்றது.