‘கணவனை கொலை செய்வது எப்படி’ பெண் எழுத்தாளருக்கு ஆயுள் தண்டனை

0
135

‘கணவனை கொலை செய்வது எப்படி’ என எழுதிய கட்டுரையின் மூலம் பிரபலமான அமெரிக்க பெண் எழுத்தாளருக்கு தனது கணவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

How to Kill Your Husband {and Other Handy Household Hints} by Kathy Lette

பல குறு நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவரும் சமயல் கலை நிபுனருமான டானியேல் கிரெய்க் கடந்த 2018ம் ஆண்டு அவர் சமையல் வகுப்பு நடத்தி வந்த நிறுவனத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

கணவனை கொலை செய்வது எப்படி; பெண் எழுத்தாளருக்கு ஆயுள் தண்டனை

அவரது பெயரில் இருந்த 9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணமும் இரண்டேகால் கோடி ரூபாய் வீடும் நான்சி வசம் சென்றது.

இதனையடுத்து கொலை நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் அப்பகுதியில் பதிவான CCTV காட்சிகளை போலிஸார் ஆராய்த போது நான்சி அங்கு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்சூரன்ஸ் பணத்திற்காக அவர் கணவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.