உக்ரைன் போர்க்களத்தில் ஹீரோவாக மாறிய 15 வயது சிறுவன்

0
167

உக்ரைனின் 15 வயது சிறுவன் ஹீரோவாக போற்றப்படுகின்ற சம்பவம் ஒன்று ரஷ்யா – உக்ரைன் போர்க்களத்தில் நடைபெற்றுள்ளது.

உக்ரைனைச் சேர்ந்த அன்ரி பொக்ரசா என்ற 15 வயது சிறுவன் தனது தந்தையுடன் சேர்ந்து விளையாட்டிற்கு பாவிக்கும் ட்ரோன்களை பாவித்து ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை தடுத்துள்ள சம்பவம் பதியப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 20க்கும் மேற்பட்ட ரஷ்ய யுத்த டாங்கிகள் உக்ரைன் படைகளின் தாக்குதலுக்கு உட்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சிறுவன் ரஷ்ய படைகளின் வருகையை அவதானிக்கும் நோக்குடன் உக்ரைன் தலைநகர் கெய்வ்விலிருந்து தனது ட்ரோன் கண்காணிப்பு கமெராவை அனுப்பியுள்ளான்.

இதனை அவதானித்த ரஷ்ய படைகள் தமது டாங்கிகளின் நகர்வை இடைநிறுத்தியுள்ளன.

தன்னுடைய ட்ரோனில் இருந்து தனக்கு கிடைத்த புகைப்படங்களை உடனடியாக உக்ரைன் படைப்பிரிவிற்கு தனது தந்தை மூலம் அனுப்பியுள்ளான் இந்த சிறுவன்.

மேற்படி புகைப்படங்களை அவதானித்து அதன் படி தாக்குதலை தொடுத்த உக்ரைன் படையினர் ரஷ்யாவின் டாக்கிகளை அழித்து நிர்மூலமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் கருத்துப்படி 20 யுத்த டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

15-year-old Ukrainian boy dubbed a hero after using drone to help defeat  Russian forces: report

Skateboarding 15-year-old boy hailed 'hero of Ukraine' for saving Kyiv with  his toy drone

உக்ரைன் போர்க்களத்தில் ஹீரோவாக மாறிய 15 வயது சிறுவன்