உக்ரைன் – ரஷ்யா போரில் முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர் கொலை

0
142

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீவிரோடோனெட்ஸ்க் நகரில் உக்ரைனுக்காகப் போரிட்ட முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராணுவ வீரரான ஜோர்டான் கேட்லி(Jordan Cadley), மார்ச் மாதம் இங்கிலாந்து இராணுவத்தை விட்டு வெளியேறினார் என்றும், கவனமாக பரிசீலித்த பிறகு, ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தில் உதவ உக்ரைனுக்குச் சென்றார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.