டொலர் இன்மையால் கரைக்கு வராத கப்பல்!

0
190

லிற்றோ எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த 3, 900 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் வந்த கப்பலுக்கு, டொலர் செலுத்த முடியாத காரணத்தால் கப்பல் கரை தட்டவில்லை.

கடந்த ஐந்து நாட்களாக அக்கப்பல் கடலில் காத்து நிற்கின்றது. இந்தக் கப்பலில் உள்ள எரிவாயுவுக்கு 2.5 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் கப்பலுக்கு இதுவரை தாமதக் கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் லிற்றோ நிறுவனம் தெரிவிக்கின்றது.

மேலும் குறித்த கப்பல் கடந்த 8ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.