அமேசான் காட்டில் காணாமல் போன பிரிட்டிஷ் செய்தியாளர் இடத்துக்கு அருகில் மனித பாகங்கள்!

0
182

அமேசான் காட்டில் கணாமல்போன பிரேஸிலில் பிரிட்டிஷ் செய்தியாளர் டோம் ஃபிலிப்ஸ் (Dom Phillips) காணாமற்போன இடத்துக்கு அருகில் மீட்புப்பணிக் குழுக்கள் மனிதப் பாகங்களைக் கண்டெடுத்துள்ளனர்.

அவரும் பழங்குடி விவகாரங்களை ஆய்வு செய்யும் நிபுணர் புரூணோ பெரேரா(Bruno Pereira) என்பவரும் அந்தப் பகுதிக்குச் சென்றதையடுத்துக் காணாமற்போனதாக நம்பப்படுகிறது.

Bruno Pereira: the dedicated defender of Indigenous rights missing in  Brazil | Brazil | The Guardian
bruno pereira

அமஸோனாஸ் மாநிலத்திலுள்ள ஆற்றின் அருகில் மனிதப் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பிரேஸிலிய மத்தியக் காவல்துறையினர் தெரிவித்தனர். அவற்றைச் சேகரித்து காணாமற்போனவர்களுடன் ஒப்பிடப்போவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

சில நாள்களுக்கு முன்னர்தான் இருவருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தப் பகுதியில் இடம்பெறும் இயற்கைப் பாதுகாப்புக்கான முயற்சிகளைப் பற்றிய புத்தகத்தைத் தயாரிப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அதன் தொடர்பில் அவர்கள் ஆய்வு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்றிருந்த இடம் சிக்கலானது என்றும் அது ஆபத்து நிறைந்தது என்றும் அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் தேடல் பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளது.

British journalist Dom Phillips missing in Brazil - Committee to Protect  Journalists

Dom Phillips: Wife of British journalist missing in Brazil's Amazon pleads  for action to find him, saying: 'Every second counts' | Evening Standard