ஜுலைக்குள் 21 ஐ நிறைவேற்றாவிட்டால் பேராபத்து! – சம்பிக்க ரணவக்க

0
577

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம், ஜுலை மாதத்துக்குள் நிறைவேற்றப்படவிட்டால், நாட்டில் அரசியல் நெருக்கடி மேலும் தலைதூக்கும் என 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

21ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரமுகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கும், சட்டவாக்க சபைக்கும் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் விதத்திலேயே 21 முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, அது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. குறித்த சட்டமூலம் விரைவில் அமைச்சரவையில் இறுதிப்படுத்தப்பட்டு, ஜுலை மாதத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் 21 ஐ நிறைவேற்ற தாமதித்தால், அரசியல் நெருக்கடி தலைதூக்கும், அது பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும் என தெரிவித்த அவர் சர்வதேச விவகாரங்களிலும் சிக்கல் நிலை வரலாம் எனவும் குறிப்பிட்டார்.