பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் படைத்த சாதனை

0
129

உலகில் மிக நீண்ட காலம் அரச பதவியை வகித்த இரண்டாமவா் என்ற பெருமையை பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் (96) (Queen Elizabeth II ) ஞாயிற்றுக்கிழமை பெற்றாா்.

பிரான்ஸில் கடந்த 1643 முதல் 1715 வரை ஆட்சி செய்த 14-ஆம் லூயிஸுக்கு அடுத்தபடியாக அரசி எலிசபெத் (Queen Elizabeth II) அதிக காலத்துக்கு அரச பதவியை வகிப்பவராக உள்ளார்.

Queen Elizabeth II's Most Notable Accomplishments

கடந்த 1927 முதல் 2016-ஆம் ஆண்டு வரை (70 ஆண்டுகள் 126 நாள்கள்) ஆட்சி செய்த தாய்லாந்து மன்னா் பூமிபோல் அதுல்யதேஜை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை மகாராணி எலிசபெத் பெற்றுள்ளாா்.

கடந்த 1953-ஆம் ஆண்டு மகுடம் சூட்டிய எலிசபெத் (Queen Elizabeth II ) பிரிட்டனின் மிக நீண்டகால முடியாட்சியாளா் என்ற பெருமையை கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.    

Queen Elizabeth's Platinum Jubilee plans revealed - CNN