வடகொரியாவின் முதல் வெளியுறவு மந்திரி ஆன பெண்

0
513

வடகொரியாவில் முதல் முறையாக பெண் வெளியுறவு மந்திரியாக சோ சோன்-ஹுய் (Cho Son-hui) நியமிக்கப்பட்டார்.

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு கூட்டம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்(Kim Jong Un) தலைமையில் நடந்தது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, நாட்டின் ராணுவ பலத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம், வடகொரியாவின் புதிய வெளியுறவு மந்திரியாக சோ சோன்-ஹுய் (Cho Son-hui)என்கிற பெண் நியமிக்கப்பட்டார்.

வடகொரியா வரலாற்றில் வெளியுறவு மந்திரியாக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மூத்த தூதரக அதிகாரியான சோ சோன்-ஹுய் (Cho Son-hui), வடகொரியா-அமெரிக்கா இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தையில் கிம்முக்கு நெருக்கமான உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.

மேலும் இவர் துணை வெளியுறவு மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.