கொழும்பிற்கு நீர் விநியோகம் செய்யும் குழாய் வெடிப்புக்குள்ளானது

0
482

லபுகம மற்றும் கலட்டுவாவ நீர்த்தேக்கங்களில் இருந்து கொழும்புக்கு நீர் விநியோகிக்கும் பாரிய குழாயொன்று இன்று காலை வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹங்வெல்ல நகருக்கு அருகில் குறித்த குழாய் வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 8 அடி உயரத்திற்கு குழாய் நீர் பரவியதுடன் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

அத்துடன் லோலெவல் வீதியின் ஒரு பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் அவ்வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாவும் கூறப்படுகின்றது.