பிரதமர் பதவியை ஏற்க விரும்பவில்லை; சஜித்

0
618

தனிப்பட்ட நலன்களுக்காக பிரதமர் பதவியை ஏற்க விரும்பவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, ஒரு நாடு என்ற ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்கள் ஆணையுடன் தீர்த்து வைப்பேன் என நம்புவதாக தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி விசுவாச கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதன் மூலம் மக்களின் போராட்டத்தின் துடிப்பை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது உறுதியான அல்லது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்காது எனவும் அனைத்து இலங்கையர்களின் நலனுக்காகவும் செயற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்களின் கருத்துக்களுக்கு துரோகம் செய்து நாட்டை முன்னேற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

குறுகிய கால நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலான பதவிகளை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் போராட்டத்தை பாதுகாக்கும் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.