விவசாயத்தில் களமிறங்கும் இலங்கை இராணுவம்

0
174

வெற்று நிலங்களில் இராணுவத்தினரைக்கொண்டு விவசாயத்தை தொடங்கப்போவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.

விவசாய சபையின் அறிவுறுத்தலுக்கமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள்ப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவசாய சமூகத்துக்கு இலங்கை இராணுவம் தனது அதிகபட்ச ஆதரவினை எப்போதும் வழங்கும் எனவும் உணவு நெருக்கடிக்கு எதிரான தனது போரின் முதல் படியாக, அரசாங்கத்தால் கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் இராணுவம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.