மீன் விலையில் திடீர் உயர்வு

0
626

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆற்று மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வறட்சியுடனான காலநிலை, எரிபொருட்களின் விலை, காரணமாக ஆற்று மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறால் கிலோ ஒன்றின் விலை 1,600 ரூபாவாகவும், கணவாய் கிலோ ஒன்றின் விலை 1,800 ரூபாவாகவும் காணப்படும் நிலையில், ஏனைய சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அதேவேளை ஆற்றை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.