கனடாவில் வீடுகளின் விலை பாரியளவில் அதிகரிக்கும் அபாயம்

0
597

கனடாவில் வீடுகளின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் என அந்நாட்டு மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட்டி வீத உயர்வு காரணமாக வரலாறு காணாத அளவிற்கு வீடுகளின் விலைகள் உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நிதி  முறைமை மீளாய்வு குறித்த ஆண்டறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் கடனாவில் வீடுகளை கொள்வனவு செய்தவர்கள் தங்களது இயலுமையை விடவும் அதிகளவு விலை கொடுத்து வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் மக்கள் கூடுதல் விலை கொடுத்து வீடுகளை கொள்வனவு செய்வதற்கு நாட்டம் காட்டி வருகின்றனர் என ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட்டி வீதங்களை உயர்த்துவத்கு உத்தேசித்துள்ளதாக கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வட்டி வீது அதிகரிப்பானது வீடுகளின் விலைகளில் தாக்கத்தை செலுத்தும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.