சிம்பாப்வே மக்கள் பணத்திற்காக கால்விரல்களை விற்கின்றார்களா?

0
557

சிம்பாப்வே நாட்டு மக்கள் பணத்திற்காக கால் விரல்களை விற்பனை செய்வதாக வெளியான பரபரப்பு தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வெளியான இந்த செய்தி வதந்தி என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.

நாட்டில் பணவீக்கம் பாரியளவில் அதிகரித்துள்ள காரணத்தினால் மக்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கால் விரல்களை விற்பனை செய்வதாக செய்தி வெளியிடப்பட்டது.

இந்த தகவல் பொய்யானது என்பதனை நிரூபிக்கும் நோக்கில் நாட்டின் பிரதி தகவல் அமைச்சர் கின்ட்னஸ் பாராடாஸா மக்களை சந்தித்து தகவல்களை திரட்டியுள்ளார்.

தலைநகர் ஹாராரேயில் அமைந்துள்ள சந்தையில் வர்த்தகர்களின் கால்களை ஒவ்வொன்றாக அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

பணத்திற்காக கால் விரல்களை மக்கள் விற்பனை செய்வதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கால் விரல்களை விற்றதாக தகவல் பரப்பிய வீதியோர வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிம்பாப்வே நாட்டின் பணவீக்கம் 130 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.