எவரஸ்ட் சிகரத்தில் பறந்த உக்ரைன் கொடி!

0
138

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே முடிவுக்கு வராது தொடந்ர்து வரும் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரஷ்ய மலையேறும் பெண் ஒருவர் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் உக்ரேனியக் கொடியை ஏற்றியுள்ளார்.

Katya Lipka எனும் பெண்மணி கடந்த ஜூன் 3 இன்ஸ்டாகிராமில் சில படங்களைப் பகிர்ந்துள்ள நிலையில் அவை வைரலாகியுள்ளன. ரஷ்ய மொழியில் உள்ள அவரது பதிவின்படி, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, மே 24 அன்று அவர் இந்த சாதனையை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது புகைப்பட பதிவிற்கு எவரெஸ்ட் சிகரம் 8848 மீ என்று தலைப்பிட்ட அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக, உள்ளே ஏதோ தலைகீழாக மாறியது என்றும் லிப்கா மேலும் விளக்கினார்.

இந்நிலையில் Katya Lipkaவின் புகைப்படத்தை ஆஸ்திரியாவுக்கான முன்னாள் உக்ரைன் தூதர் ஓலெக்சாண்டர் ஷெர்பா ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அதேசமயம் உக்ரைனுடன் அனுதாபம் காட்டுவதைத் தவிர, Lipka தற்போது புடின் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் அலெக்ஸி நவல்னிக்கு ஆதரவாகவும் Free Navalny என்று மற்றொரு பதிவில் குரல் கொடுத்துள்ளார்.

இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை எதிர்க்கும் ஒரே ரஷ்ய பெண் இவர் அல்ல. உக்ரேனில் புடினின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் இந்த மூன்று மாதங்களில், பல ரஷ்ய அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில் , அரசாங்கம் மீதான ரஷ்ய மக்களின் ஆதரவு குறைந்து வருவதாக த்கவல்கள் கூறுகின்றன.