தொலைபேசியை தவறவிட்ட புலம்பெயர் நபர்; உரியவரிடம் ஒப்படைத்த கிளிநொச்சி இளைஞன்

0
191

கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் தவறவிடப்பட்ட 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியினை உரியவரிடம் ஒப்படைத்த புதுமுறிப்பு இளைஞனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர் கிளிநொச்சியில் உள்ள கிராமிய பாடசாலை ஒன்றுக்கும் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கும் உதவி செய்யும் பொருட்டு கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார்.

4 லட்சம் பெறுமதியான தொலைபேசியை தவறவிட்ட புலம்பெயர் யாழ் நபர்;  கிளிநொச்சி இளைஞன் செய்த செயல்

இதன் போது அவரது 4 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கையடக்க தொலைபேசியினை தவறவிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த தொலைபேசியினை கண்டெடுத்த கிளிநொச்சி – புதுமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை தவக்குமார் என்ற இளைஞன் அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார். இளைஞனின் இச்செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.