காதல் விவகாரத்தால் களு கங்கையில் தற்கொலை செய்த இளைஞன் சடலம் மீட்பு

0
199

இரண்டு நாட்களுக்கு முன்னர் காதல் விவகாரத்தால் களுத்துறை களு கங்கையில் குதித்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து தங்கள் மகனுக்கு காதல் விவகாரம் இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் குடும்பத்தார் மகனை தாக்கியிருந்ததாகவும் மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனவே தமது மகன் தண்ணீரில் குதித்தாரா? அல்லது யாராவது ஒருவர் அவரை ஆற்றில் தள்ளி விட்டாரா? என்பது குறித்து சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.