ரணிலுக்கு கோட்டாபய எச்சரிக்கை கடிதம்!

0
571

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சூழ இருப்பவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிருப்தியடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து பிரதமர் ரணிலின் விசுவாசியும், ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான சாகல ரத்னாயக்கவை, ஜனாதிபதி அண்மையில் நேரில் அழைத்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது “ மஹிந்த ராஜபக்ச அரசியலில் உச்சம் தொட்டவர். ஆனால் அவரை சூழ இருந்தவர்கள் காலை வாரினர். களங்கத்தை ஏற்படுத்த வழிவகுத்தனர்.

பிரதமர் ரணிலுக்கும் இந்நிலைமை ஏற்படக்கூடாது. எனவே, கவனமாக இருக்க சொல்லுங்கள் என சாகல ஊடாக ஜனாதிபதி ரணிலுக்கு தூதனுப்பியுள்ளார்.

அதேவேளை தனது அண்ணனான மஹிந்த ராஜபக்சவை, பிரதமர் பதவியில் இருந்து விலக்க வைப்பதற்கு தான் ஏதோவொரு வழியில் அழுத்தம் பிரயோகிக்க நேரிட்ட விவகாரத்தால் ஜனாதிபதி தற்போதும் கவலையில் இருக்கின்றாராம் .

மேலும் “ அண்ணனால்தான் எனக்கு பதவிகள் கிடைத்தன. ஆனால் அவரையே வீட்டுக்கு அனுப்ப வேண்டியயேற்பட்டது. நாட்டுக்காக நான் இதனை செய்தேன். எனது வாழ்வில் எடுக்கப்பட்ட கடினமான தீர்மானம் இதுதான் என அண்மையில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தின்போதும் தனது உள்ளக் குமுறலை ஜனாதிபதி வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது.