காட்டு யானை தாக்கியதில் 4 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு!

0
153

அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் 4 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் கீழ் குழந்தையை உறங்க வைத்து விட்டு அதன் பெற்றோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பிரவேசித்த காட்டுயானை குழந்தையை தாக்கியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.