நாட்டை விட்டு வெளியேறிய 119 இளைஞர்கள்; காத்திருப்போர் பட்டியலில் 5800 பேர்

0
680

119 இலங்கை இளைஞர்கள் வேலைவாய்ப்புகளுக்காக நேற்றுமுன்தினம் கொரியா பயணமாகினர்.

அடுத்த ஆறு மாதங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தகுதி பெற்ற கொரிய வேலை வாய்ப்பை எதிர்பார்த்துள்ள சுமார் 5,800 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

அவர்களை விரைவில் பணிக்கு அனுப்புவதற்கான சாத்தியப்பாடு குறித்து, கொரிய மனிதவள திணைக்களத்திற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இடையில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவினர் விரைவில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவர் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரிய வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறிய குழுவினரை அனுப்பிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, புலம்பெயர் பணியாளர்கள் சரியான வங்கி முறையின் மூலம் தமது வருமானத்தை நாட்டுக்கு அனுப்பினால், தற்போதுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகளை நீக்கி, மருந்து பற்றாக்குறையையும் இல்லாமலாக்க முடியும் என தெரிவித்தார்.

இதன்போது கொரிய வேலைகளுக்காக புறப்படும் பணியாளர்களை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, அவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.