விஜய் டிவியை விட்டு விலக முடிவு செய்துள்ள பிரபல தொகுப்பாளர்! இதுதான் காரணமா?

0
136

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மேலும் பிரபலம் ஆனாலும் மீண்டும் விஜய் டிவிக்கே வந்து தற்போது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் பிரியங்கா தனது பிறந்தநாளை வீட்டில் வெகு விமர்சியாக கொண்டாடி இருக்கிறார்.

பிக் பாஸ் நண்பர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் சேர்ந்து பிரியங்காவுக்கு பிறந்தநாளில் பல பரிசுகள் கொடுத்து இருக்கின்றனர். அதை எல்லாம் பார்த்து பிரியங்கா நெகிழ்ச்சி ஆகி இருக்கிறார்.

கேக் வெட்டி, முகத்தில் எல்லாம் பூசி மகிழ்ச்சியாக பிரியங்கா பிறந்தநாளை கொண்டாடி முடித்திருக்கிறார். அந்த காணொளி அவர் ஒரு மாதம் கழித்து தற்போதுதான் வெளியிட்டு இருக்கிறார்.

இதேவேளை, விஜய் டிவியை விட்டு விலக முடிவெடுத்த பிரியங்காவின் அதிர்ச்சி முடிவுக்கு இதுதான் காரணம்,  அந்த காணொளியில் நகைச்சுவை நடிகர் பாலா உடன் பேசும் ஒரு பகுதியும் இடம் பெற்று இருக்கிறது.

தனக்கு 30 வயது ஆகிவிட்டது, அதனால் வயதானவர் போன்ற ஃபீல் வருகிறது, அதனால் நான் இதோடு தொலைக்காட்சியை விட்டுவிட்டு ஒரு பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன் என பிரியங்கா தெரிவித்து இருக்கிறார்.

அதற்கு பதில் சொன்ன பாலா “மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் தொகுப்பாளர் ஆகிவிட முடியாது, மைக்கிற்கே பிடித்தவங்க தான் தொகுப்பாளர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது” என கூறி பிரியங்காவின் முடிவை மாற்ற சொல்லி இருக்கிறார்.