விமல் வீரவங்ச மனைவிக்கு பிணை கிடைக்குமா? கிடைக்காதா… இன்று முடிவு

0
825

இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மனைவி சஷி வீரவன்ஷ, பிணையில் விடுவிக்கக் கோரிய தனது நிலைப்பாட்டை விளக்குமாறு கோரி சட்டமா அதிபரினால் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள சஷி வீரவன்சவின் பிணை மனு இன்று பரிசீலிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும், 100,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல இம்மாதம் 27ஆம் திகதி தீர்ப்பளித்தார்.

எனினும் நீதிமன்ற தண்டனைக்கு எதிராக சஷி வீரவன்சவின் சட்டத்தரணிகள் பிணை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், பிணை மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிணை மனு கோரப்பட்ட போது சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் சஷி வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.