தூக்கி எறியப்பட்ட கோட்டா கோ கம கூடாரங்கள்!

0
491

இன்று அதிகாலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் காலிமுகத்திடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக கோட்டாகோகம பகுதியில் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்துள்ளன.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேசமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கத்தை விலகுமாறு கோரி காலிமுகத்திடல் பகுதியில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோட்டாகோகம மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 53ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தூக்கி எறியப்பட்ட கோட்டா கோ கம கூடாரங்கள்!

தூக்கி எறியப்பட்ட கோட்டா கோ கம கூடாரங்கள்!