பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு நூலகம் திறப்பு

0
188

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஏற்பாட்டில் பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு நூலகமொன்று நேற்று (30) கொழும்பு 7ல் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தின் வாகன தரிப்பிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாருக் புர்க்கி மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உதய நாணயக்காரவும் இணைந்து திறந்து வைத்தனர்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இந்நூலக நிர்மாணப்பணிக்காக 2.3மில்லியன் ரூபாவை நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் செலுத்தியுள்ளது. பாதையோர நுாலகம் எனப் பெயரிடப்பட்டு ரோயல் கல்லூரிக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள் இங்குள்ள நுால்களை வாசிக்கவும் மேலும் நுால்களை அனபளிப்புச் செய்யவும் முடியும். இந் நூலகத்தில் பாகிஸ்தான் – இலங்கை சம்பந்தமான நூல்கள் காணப்படுகின்றன. இங்கு உரையாற்றிய உயா் ஸ்தானிகா் இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டு நிலவி வருகின்றது. இங்கு உள்ள நூல்களை இலவசமாக வாசிக்க முடியும். நுால்களை அன்பளிப்புச் செய்யவும் முடியும்.

கொழும்பு 7 ரம்மிய பகுதியில் இருந்து இதனை பயன்பெற வேண்டும். அத்துடன் இலங்கை பாகிஸ்தன் நாடுகள் பற்றிய கலை கலாசார விழுமியங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.