ரயில் முன்பதிவு ஆசன கட்டணங்கள் அதிகரிப்பு

0
170

ரயில்வே திணைக்களம் ஜூன் 1ஆம் திகதி முதல் முன்பதிவு இருக்கைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கவுள்ளது.

அதன்படி, 1ஆம் திகதி முதல் முன்பதிவு இருக்கைகளுக்கான கட்டணம் 30% உயர்த்தப்பட்டுள்ளது. புகையிரத சேவைகளில் ஏற்படும்  நட்டத்தை குறைப்பதற்காகவே கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஒரு ரயில் டிக்கெட்டின் விலை பஸ் கட்டணத்தில் 25% என்றும் அவர் கூறினார்.

புகையிரதத் திணைக்களம் நாளாந்தம் எரிபொருளுக்காக சுமார் 40 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியிருந்தாலும், நாளாந்த வருமானம் சுமார் 15 மில்லியன் ரூபாவாகும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

எரிபொருளுக்கு மேலதிகமாக ஏனைய நடவடிக்கைகளுக்கு நாளாந்தம் 30 மில்லியன் ரூபா செலவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.