ரஷ்யாவை விரட்ட உக்ரைனுக்கு ஹார்பூன் ஏவுகணைகளை வழங்கிய நாடு!

0
233
170822-N-GR361-082 PHILIPPINE SEA (Aug. 22, 2017) A harpoon missile launches from the missile deck of the littoral combat ship USS Coronado (LCS 4) off the coast of Guam. Coronado is on a rotational deployment in the U.S. 7th Fleet area of operations, patrolling the region's littorals and working hull-to-hull with partner navies to provide the U.S. 7th Fleet with the flexible capabilities it needs now and in the future. (U.S. Navy photo by Mass Communication Specialist 2nd Class Kaleb R. Staples/Released)

உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல்களைத் தாக்கும் ஹார்ப்பூன் ஏவுகணைகள் வந்துள்ளன.

அமெரிக்காவில் இருந்தும் ஹோவிட்சர் ஏவுதல் ஆயுதங்கள் கிடைத்துள்ள. ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போரில் இது உக்ரைனுக்கு பலம் தருவதாக இருக்கும் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்நிக்கோவ்(Oleksi Resnikov) தெரிவித்துள்ளார்.

ஹார்ப்பூன் ஏவுகணைகள் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் பயிற்சி பெற்ற உக்ரைன் வீரர்களால் அவை பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் ஒட்டுமொத்த கடற்படை கப்பல்களையும் மூழ்கடிக்கும் விதமாக அத்தனை ஏவுகணைகள் கிடைத்துள்ளன என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.