லொட்டறியில் பெருந்தொகை பரிசு… பங்குபோட்டுகொண்ட ஒரு நகர மக்கள்

0
192

வேல்ஸ் நகரம் ஒன்றில் Postcode லொட்டறியில் பெருந்தொகை பரிசாக வென்ற 400கும் மேற்பட்ட மக்கள், அந்த தொகையை பங்கிட்டுள்ளனர்.

தெற்கு வேல்ஸ் நகரமான Pen-Y-Dre பகுதியிலேயே Postcode லொட்டறியில் அப்பகுதி மக்களுக்கு 3.7 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.

இதில் 9 பேர்களுக்கு தங்கள் அஞ்சல் இலக்கம் NP22 5DL என்பதால் பெருந்தொகை பங்காக கிடைத்துள்ளது. இரண்டு சீட்டுகளில் விளையாடிய 76 வயது எட்வர்ட் ஓவன் என்பவருக்கு 370,000 பவுண்டு தொகையும் எஞ்சிய 8 பேர்கள் 185,000 பவுண்டுகள் தொகையும் பங்கிட்டுள்ளனர்.

ஓய்வு பெற்ற இரும்பு தொழிற்சாலை ஊழியரான எட்வர்ட் ஓவன் தமக்கு கிடைத்த தொகையில் புது கார் ஒன்றை வாங்க இருப்பதாகவும், உலகம் முழுவதும் கப்பல் பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று 43 வயதான லிசா ஸ்கேன்லான் என்பவர் 185,000 பவுண்டுகள் தொகையும் கைப்பற்றியுள்ளார். Pen-Y-Dre பகுதியில் உள்ள மொத்தம் 426 பேர்கள் மொத்தமுள்ள 3.7 மில்லியன் பவுண்டுகள் தொகையை தாங்கள் வாங்கிய லொட்டறி சீட்டுக்கு ஏற்றவாறு பங்கிட்டு கொண்டுள்ளனர்.

குறைந்தது ஒருவருக்கு 3,894 பவுண்டுகள் முதல் 11,682 பவுண்டுகள் வரையில் பரிசாக வென்றுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.