அவிசாவளை குருகல்ல பாடசாலை மாணவன் மாயம்!

0
278

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் நேற்று இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் காணாமல் போனவர் பாடசாலை மாணவர் என்றும் இவர் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.