நான்கு நாட்களில் 4.7 மில்லியன் டொலர் உக்ரைனுக்காக நிதி திரட்டிய அண்டை நாடு

0
573

உக்ரைன் இராணுவத்திற்காக நவீன ட்ரோன் விமானம் வாங்கும் முயற்சியில் லிதுவேனியா பொதுமக்கள் களமிறங்கியுள்ளது கவனத்தை ஈர்த்து வருகிறது.

நான்கு நாட்களில் 4.7 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதி நவீன துருக்கி ட்ரோன் வாங்கி உக்ரைன் இராணுவத்திற்கு பரிசளிக்க வேண்டும் என்றே லிதுவேனியா மக்கள் தெரிவித்துள்ளனர்.

லிதுவேனியாவின் இணைய பக்க ஊடகம் ஒன்றே குறித்த கோரிக்கையை முன்வைத்து பொதுமக்களை நாடியது. முன்னாள் சோவியத் நாடான லிதுவேனியா மீது எப்போது வேண்டுமானாலும் விளாடிமிர் புடின் படையெடுப்பை முன்னெடுக்கலாம் என அச்சம் நீடித்து வருக்கிறது.

இந்த நிலையில் முதன்முறையாக பொதுமக்கள் ஒன்று திரண்டு இந்த அளவில் பெருந்தொகையை திரட்டி ஒரு நாட்டின் ராணுவத்திற்கு ஆபத்தான உபகரணங்களை வாங்க உதவ உள்ளனர்.

உக்ரைன் போருக்கு முன்னர் கனவில் கூட எவரும் நினைத்துப் பார்த்ததில்லை பெண்கள் கூட துப்பாக்கி வாங்குவார்கள் என்று. ஆனால் தற்போது அது வழக்கமாக மாறியுள்ளது.

உக்ரைன் இராணுவத்திற்காக துப்பாக்கி வாங்க நிதியுதவி அளித்து வருவதாக கூறியுள்ள லிதுவேனியா பெண் ஒருவர், தம்மால் இயன்ற அளவு இன்னும் நிதியளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.